அரியவகை கனிமங்களில் ஒன்றாக கருதப்படும் யுரேனியம், ராஜஸ்தான் மாநிலத்தில் சிகர், உதய்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் 15 ஆயிரம் டன்னுக்கும் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்த பதிலில், யுரேனியம் எடுப்பதற்கான அனுமதிகளைப் பெறுவதற்கு முந்தைய நடவடிக்கைகள் யுரேனியம் கார்பரேசன் நிறுவனத்தால் தொடங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். சிகர் மாவட்டத்தில் யுரேனியம் சுரங்க ஆய்வு மையத்தை அமைப்பது குறித்து அரசு பரிசீலித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.