எகிப்தில், திருமண விருப்பத்தை நிராகரித்த பல்கலைக் கழக மாணவியை கொலை செய்த நபரை, தூக்கிலிடும் காட்சியை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வேண்டுமென நீதிபதி தெரிவித்துள்ளார்.
மன்செளரா பல்கலைக்கழகத்தில் பயின்ற சக மாணவியை கொலை செய்த மாணவருக்கு, கடந்த ஜூன் 28-ம் தேதி மரண தண்டனை விதித்த எகிப்து நீதிமன்றம், தண்டனை நிறைவேற்றப்படுவதை தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்ப வசதியாக சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டுமென தற்போது நாடாளுமன்றத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.
இதன்மூலம் வருங்காலத்தில் இதுபோன்ற குற்றங்கள் நடைபெறுவதை தடுக்க முடியும் என நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.