உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் 150 நாட்களை கடந்துவிட்ட நிலையில், கிழக்கு உக்ரைனில் உள்ள டொனெட்ஸ்க் மாகாணத்தை கைப்பற்ற ரஷ்யப் படைகள் தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன.
இரவு, பகல் பாராமல் தொடர்ச்சியாக பீரங்கிக் குண்டுகள் மற்றும் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில் டொனெட்ஸ்க் மாகாணத்தில் ரஷ்ய படைகள் நடத்தியதாக கூறப்படும் தாக்குதலில் வானில் இருந்து தெர்மைட் குண்டுகள் தீ மழையாக பொழிந்தது.
இரு நாடுகளும் எளிதில் தீப்பற்றக்கூடிய ஆயுதங்களை வைத்து கடும் தாக்குதல் மேற்கொள்வதால், இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.