இலங்கையில் போராட்டக்காரர்களால் முற்றுகையிடப்பட்ட அதிபர் அலுவலகம் திங்கட்கிழமை முதல் மீண்டும் திறக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி உச்சத்தை அடைந்ததையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. வெளிநாட்டுக்கு தப்பியோடிய கோத்தபய ராஜபக்சே பதவி விலகி புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே பொறுப்பேற்ற பிறகும் அதிபர் அலுவலகம் முன்பு போராட்டம் தொடர்ந்துவந்தது.
போராட்டக்காரர்கள் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தப்பட்டதை அடுத்து நாளை முதல் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.