புதுச்சேரியில் ரவுடி கொலை செய்யப்பட்ட வழக்கில் 9 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சண்முகாபுரத்தைச் சேர்ந்த பன்னீர்செல்வத்தை சில நாட்களுக்கு முன் மர்ம கும்பல் ஒன்று நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொலை செய்து விட்டு தப்பி ஒடியது.
இந்த வழக்கில் 9 பேர் கைதுசெய்யப்பட்ட நிலையில், நண்பரை கொலை செய்ததற்கு பழி வாங்கும் விதமாக கொலை நிகழ்ந்திருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.