பெல்ஜியத்தில் ஊதிய உயர்வு கோரி ரியான் ஏர் விமான நிறுவனத்தின் ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால், விமானப் போக்குவரத்து முடங்கியது.
கொரோனாவுக்கு பின்னர் சர்வதேச பயணங்கள் சகஜ நிலை திரும்பியுள்ள நிலையில், சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
பிரசல்ஸ், சாரெலாய் விமான நிலையங்களில் சுமார் 80 விமானங்கள் வரை ரத்து செய்யப்பட்டதால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.