இந்தியாவின் குடியரசுத்தலைவர் தேர்தலில் வெற்றிபெற்றுள்ள திரௌபதி முர்முவுக்கு ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், இந்தியாவுடனான உறவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக தெரிவித்துள்ளார்.
நட்பு நாடுகளின் நலனுக்காகவும், வலுவான சர்வதேச ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பின் நலன்களுக்காகவும் ரஷ்யா-இந்தியா இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் வகையில் உங்களது செயல்பாடுகள் ஊக்குவிக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.