ராஜஸ்தானில் சட்டவிரோதமாக கல் குவாரிகள் செயல்பட்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாது ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட நிலையில், மாநில சுரங்கத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஆளும் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ பரத் சிங் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சட்ட விரோத கல் குவாரிகளுக்கு எதிராக சாது விஜய் தாஸ் என்பவர் 500 நாட்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
டெல்லி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அவர், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.