மாற்று திறனாளிகளை விமானங்களில் ஏற்றாவிட்டால், அதற்குரிய உரிய காரணத்தை எழுத்துப்பூர்வமாக பயணிக்கு தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து விமான போக்குவரத்து நிறுவனங்களையும், சிவில் விமான போக்குவரத்துத்துறை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தகுந்த காரணம் இல்லாமலும், மருத்துவரின் ஆலோசனை இல்லாமலும் எந்தவொரு மாற்றுதிறனாளி பயணிக்கும் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கக்கூடாது என்றும் விமான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.