சூரியனிலிருந்து வெளிப்பட்டுள்ள சக்திவாய்ந்த காந்தப்புயல் நாளை பூமியை தாக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
நெருப்பு பந்தான சூரியனில் உள்ள ஒரு துளையிலிருந்து இந்த காந்தபுயல் வெளிப்பட்ட காட்சிகள் நாசாவின் சூரிய இயக்கவியல் ஆய்வகத்தில் பதிவாகியுள்ளது.
கடந்த வியாழன் அன்று இந்த காந்தபுயல் சூரியனிலிருந்து வெளிப்பட்டதாகவும் மணிக்கு சுமார் 38 லட்சத்து 26 ஆயிரத்து 800 கிலோமீட்டர் வேகத்தில் அது வந்துக்கொண்டிருப்பதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலால் பூமியில் ரேடியோ அலைகள், செயற்கைகோள்கள், மின்சார கோபுரங்கள் பாதிக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.