உத்தரபிரதேசம், மகாராஷ்டிராவை தொடர்ந்து கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஆப்பிரிக்கன் பன்றிக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது.
மானந்தவாடியில் உள்ள இரண்டு பண்ணைகளில் உயிரிழந்த பன்றிகளின் மாதிரிகள் எடுத்து பரிசோதனை செய்யப்பட்டது. பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த பண்ணைகளில் உள்ள 300 பன்றிகள் அழிக்கப்பட்டுள்ளன.
இதனிடையே, பன்றிக்காய்ச்சல் பரவாமல் தடுக்க உயிருடன் உள்ள பன்றிகள், அதன் இறைச்சிகள், பன்றி உணவு வகைகளை கேரளாவிற்குள் கொண்டு வரவும், அங்கிருந்து வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லவும் ஆகஸ்ட் 14ம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.