கேரள மாநிலம் திருச்சூரில் மதுபோதையில் போட்டி போட்டுக் கொண்டு நடைபெற்ற கார் பந்தயத்தில் எதிரே வந்த டாக்ஸி மீது மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மின்னல் வேகத்தில் சீறிபாயும் கார்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
திருச்சூரில் நேற்று முன்தினம் இரவு தார் மற்றும் பி.எம்.டபிள்யூ கார்களுக்கு இடையே நடைபெற்ற பந்தயத்தின் போது, குருவாயூர் தரிசனம் முடித்து திரும்பிய டாக்ஸி கார் மீது நேருக்குநேர் மோதியது. இந்த விபத்தில் கார் ஓட்டுநர் உட்பட 3பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பிய நிலையில், மேலும் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார்.