திருமணம் ஆகாத பெண்ணின் 24 வாரமான கருவைக் கலைக்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
திருமணம் ஆகாத பெண்ணுக்கு ஒருமித்த உறவால் உருவான கருவைக் கலைக்க சட்டத்தில் இடம் இல்லை என கூறி 25 வயது பெண்ணின் மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட பெண் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
திருமணம் ஆகவில்லை என்ற காரணத்திற்காக மட்டும் கருவைக் கலைக்க அனுமதி மறுக்க கூடாது என்று கடந்த ஆண்டில் திருத்தப்பட்ட சட்டத்தை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
கருவைக் கலைப்பதால் அந்த பெண்ணிற்கு ஆபத்து நேரிடாது என்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் அளித்த பரிந்துரையை ஏற்று உச்சநீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.