குடியரசுத் தலைவர் தேர்தலில் திரவுபதி முர்மு வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில் ஒடிசாவில் அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
டெல்லியில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் ஒடிசாவின் ராய்ரங்பூரில் பாஜகவினர், உள்ளூர் மக்கள், பழங்குடியினத்தைச் சேர்ந்த நாட்டுப்புறக் கலைஞர்கள் மேளதாளத்துடன் ஆடிப்பாடிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.