உக்ரைன் போரில் சுமார் 15 ஆயிரம் ரஷ்யர்கள் கொல்லப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 5 மாதங்களாக நீட்டிக்கும் சூழலில், இரு தரப்பிலும் ஆயிரக் கணக்கான வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் போரில் 15 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாகவும் சுமார் 45 ஆயிரம் வீரர்கள் காயமடைந்திருக்கலாம் என்றும் அமெரிக்க மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குனர் வில்லியம் பர்ன்ஸ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் தரப்பில் ஏற்பட்ட இறப்புகள் இதை விட சற்று குறைவாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.