காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த எண்பதாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐம்பதாயிரம் மின்சாரப் பேருந்துகளை வாங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பொதுப் போக்குவரத்துக்கு மின்சாரப் பேருந்துகளைப் பயன்படுத்துவதன் மூலம் மாசு வெளிப்பாட்டை முற்றிலும் குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது.
அதன் ஒருபகுதியாக ஏற்கெனவே 5 மாநிலங்களின் அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு 5450 மின்சாரப் பேருந்துகள் கொள்முதல் செய்ய மத்திய அரசின் கன்வர்ஜன்ஸ் எனர்ஜி சர்வீசஸ் நிறுவனம் ஒப்பந்தங்களை வழங்கியுள்ளது. இந்நிலையில் மேலும் ஐம்பதாயிரம் மின்சாரப் பேருந்துகள் வாங்க டெண்டர் கோரத் திட்டமிட்டுள்ளது.