இலங்கையின் எட்டாவது அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில், புதிய அதிபரை தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.
ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற தேர்தலில் இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே, முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் வாக்களித்தனர்.
அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் எம்.பி.க்கள் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் வாக்களிக்கவில்லை.
தேர்தல் முடிவடைந்து உடனடியாக நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ரணில் விக்கிரமசிங்க 134 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட டலஸ் அழகப்பெருமவுக்கு 82 வாக்குகள் கிடைத்தன. இடதுசாரி வேட்பாளர் அனுர குமார திசாநாயக்கவுவுக்கு வெறும் 3 வாக்குகள் மட்டுமே கிடைத்தன. 4 வாக்குகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது.