இந்தியாவின் எல்லைக்குள் பாதுகாப்பு படைகளை தாண்டி ஊடுருவிச் செல்ல புதிய உள்சாலைகள், பாலங்களை சீனா அமைத்து வருவதை சாட்டிலைட் படங்கள் அம்பலப்படுத்தியுள்ளன.
டோக்லாம் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து வெளியான சாட்டிலைட் படங்களில் சீனா ஒரு கிராமத்தை உருவாக்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அங்கு கார் நிறுத்துமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
பூட்டான் எல்லைக்குட்பட்ட பாங்டா என்ற அந்த கிராமத்தில் இருந்து, இந்தியாவின் படைகளை நேராகக் கண்காணிக்க முடியும் என்று கூறப்படுகிறது