இந்தியாவில் 200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியதை பாராட்டி மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சிறந்த நிர்வாகத்திற்கான மற்றொரு மைல்கல் 200 கோடி டோஸ் தடுப்பூசி என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பில்கேட்ஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
கொரோனா பரவலின் தாக்கத்தை குறைப்பதற்காக இந்திய தடுப்பூசி உற்பத்தியாளர்கள் மற்றும் இந்திய அரசுடனான தொடர்சியான கூட்டணிக்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம் என பில்கேட்ஸ் பதிவிட்டுள்ளார்.