பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுப்பதற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
வழக்குகளில் தன்னை கைது செய்ய தடை கோரி நுபுர் சர்மா தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
அதுவரை நுபுர் சர்மா மீது கைது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றம் வழக்குகள் அனைத்தையும் ஒன்று சேர்ப்பது குறித்து பதிலளிக்கவும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உத்தரவிட்டது.