சீனாவில் அடுத்த 12 நாட்களுக்கு நிலவும் கடும் வெப்பம் அலைகளால் 90 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கடந்த மாதம் 13ம் தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலை வீசி வரும் நிலையில், வடக்கு சீனாவின் ஹெபய் மாகாணத்தில் மொத்தமுள்ள 71 தேசிய வானிலை ஆய்வு மையங்களில் பதிவான வெப்பநிலை முந்தைய சாதனைகளை முறியடித்துள்ளன. இதில், லிங்ஷூ நகரில் மட்டும் 44.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.