மருத்துவ சேவைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அனுப்பிய கடிதத்தில், புற்றுநோய் சிகிச்சை மதிப்பீட்டு திட்டங்கள், உயிர் மருத்துவ கழிவு சுத்திகரிப்பு உள்ளிட்டவற்றுக்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி வரி விதிக்க 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.