வட ஆப்பிரிக்க நாடான சூடானின் ப்ளூ நைல் மாகாணத்தில் பழங்குடியினருக்கு இடையே நடந்த மோதலில் 31 பேர் உயிரிழந்தனர்.
அல் - டமாசின், அல்-ருஸ்ஸைர்ஸ் ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்ட இரவுநேர ஊரடங்கை மீறி, பெர்டி மற்றும் ஹவுசா பழங்குடியினருக்கு இடையே வன்முறை மூண்டது.
இதில், 16 கடைகள் சூறையாடப்பட்டதாகவும், 39 பேர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.