இரண்டரை லட்சம் டன் வெங்காயத்தை மத்திய அரசு இருப்பு வைத்துள்ளதால், நடப்பு நிதியாண்டில் வெங்காயம் விலை உயராது என தகவல் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் வெங்காய உற்பத்தி பாதிக்கப்படும் எனக் கூறப்படும் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள வெங்காயம் சந்தைக்கு அனுப்பப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும் எனத் தெரிகிறது.
குஜராத், மகாராஷ்டிரா, மத்தியபிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து மத்திய நுகர்வோர் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சகம் வெங்காயங்களை வாங்கி இருப்பு வைத்துள்ளது.