உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், சட்டவிரோத கட்டிடங்கள் புல்டோசர்கள் மூலம் இடிக்கப்படுவதற்கு உடனடியாக தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது.
ஜாமியத் உலாமா ஏ-ஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு தாக்கல் செய்த மனுவில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குறிப்பிட்ட சமூகத்தினரின் வீடுகள் குறிவைத்து இடிக்கப்படுவதாக தெரிவித்திருந்தது.
உத்தரபிரதேச அரசு சார்பில் ஆஜரான துஷார் மேத்தா, கலவரத்தில் பங்கேற்றவர் என்ற காரணத்துக்காக ஒருவரின் சட்டவிரோத கட்டிடங்களுக்கு விதிவிலக்கு அளிக்க முடியாது என்றும், கலவரம் நடைபெறுவதற்கு முன்னதாகவே சட்டவிரோத கட்டிடங்களை இடிக்கும் பணி தொடங்கிவிட்டது எனவும் கூறினார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ். நரசிம்மா அமர்வு, நகராட்சி சட்டத்தின் கீழ் சட்டவிரோத குடியிருப்புகள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம் என்றும் இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி விசாரணையை ஆகஸ்ட் 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்