இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு ரஷ்யாவின் போர் தான் காரணம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார்.
தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய தலைமைத்துவ மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று பேசிய அவர், ரஷ்யாவால் தான் உலகளவில் உணவுப்பொருட்கள் மற்றும் எரிவாயுவின் விலை உயர்ந்துள்ளதாகவும், இது எப்போது முடிவுக்கு வரும் என யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்.
உக்ரைன் மீதான படையெடுப்பின்போது பொருளாதார ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் தந்திரத்தை ரஷ்யா பயன்படுத்துவதாகவும் ஜெலன்ஸ்கி குறிப்பிட்டார்.