இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்த பின் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான சூழலில் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய உள்ள ரணில், இன்று முதல் அதிபரின் அலுவலகத்திற்கு சென்று பொறுப்பு ஏற்பார் என்று கூறப்படுகிறது.
வரும் 20 ஆம் தேதி கோத்தபய ராஜபக்சேவின் ராஜினாமாவுக்குப் பிறகு புதிய அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
அப்போது ரணில் அதிபராகவே நீடிப்பாரா என்பது தெரிய வரும். 13 ஆம் தேதியிட்டு தமது ராஜினாமா கடிதத்தை கோத்தபயா ராஜபக்சே அளித்து விட்டதாகவும் அக்கடிதம் இன்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.