உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 29 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டான்பாஸை முழுவதுமாக கைப்பற்ற முயற்சிக்கும் ரஷ்யா, தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை சாசிவ் யார் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ராக்கெட் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் அக்கட்டிடம் உருக்குலைந்து போனது.
இடிபாடுகளில் இருந்து இதுவரை 24 பேர் சடலமாக மீட்கப்பட்டதாகவும், அதில் சிக்கியுள்ள 5 சடலங்களை மீட்க முடியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.