உக்ரைனின் டொனெட்ஸ்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில், இடிபாடுகளில் சிக்கி 15 பேர் உயிரிழந்தனர்.
சாசிவ் யார் பகுதியில் ராக்கெட்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில், குடியிருப்பு கட்டிடத்தின் ஒரு பகுதி இடிந்து தரைமட்டமானது.
உருக்குலைந்த கட்டிடத்தின் இடிபாடுகளில் 24-க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ள நிலையில், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.