விமானிகள், சிப்பந்திகளைத் தொடர்ந்து இன்டிகோ நிறுவனத்தின் விமான பராமரிப்புத் தொழில்நுட்பக் குழுவினர் பலரும் மொத்தமாக விடுப்பு எடுத்துள்ளனர்.
டெல்லி, ஐதராபாத்தில் பணிபுரியும் அந்த ஊழியர்கள், தங்களுக்கு மிக குறைவான ஊதிய உயர்வே வழங்கப்பட்டதாக கூறி விடுப்பு எடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதால், விமான சேவை ஏதும் பாதிக்கப்படவில்லை என விமான நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.