உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விமானந்தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்தின் 4ஆவது கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், கப்பலில் உள்ள ஆயுதங்கள், சிக்கலான கருவிகளை கையாள்வது தொடர்பாகவும் சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கொச்சி கப்பல் கட்டும் தளத்தில் அந்த கப்பல் கட்டமைக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 ஆயிரம் டன் எடைகொண்ட அந்த கப்பல், இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் அடுத்த மாதம் கடற்படையில் இணைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.