சென்னையில், கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடிய நபர், கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்ட போது போலீசிடம் சிக்கினார்.
பல்லாவரம் அருகே சாலையில் சென்ற 77 வயது மூதாட்டியிடம் 2 சவரன் தங்க செயினை அறுத்துக் கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுள்ளார்.இதனால் அந்த மூதாட்டியின் கழுத்து பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது, இதைப் பார்த்த பொதுமக்கள் மூதாட்டியை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்,ஓடிய நபரை போலீசார் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் பிடித்தனர்.
ஏ.டி.எம் பழுது பார்க்கும் நிறுவனத்தில் பணியாற்றி வந்த ஜெயபால் என்ற அந்த நபர், பல லட்ச ரூபாய் கடன் வாங்கி ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததும், கடனை அடைக்க செயின் பறிப்பில் ஈடுபட்டதுடன், செயினை அடகு வைத்து பெற்ற 60,000 ரூபாயையும் ஆன்லைன் ரம்மியில் இழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.