சென்னையில் மழைநீர் வடிகால்வாய் அமைக்கும் பணிகள் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், செப்டம்பர் மாதத்துக்குள் பணிகளை நிறைவு செய்ய ஒப்பந்ததாரர்களுக்கு வலியுறுத்தி உள்ளதாகவும் மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சைதாப்பேட்டையில், அன்னை வேளாங்கண்ணி கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமை தொடங்கி வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.