தலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அரசு மிக விரைவில் அங்கீகரிக்கப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் அரசின் அங்கீகாரம் குறித்து எந்த நாடும் இதுவரை பேசவில்லை என்று தெரிவித்துள்ள தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்க உதவி செயலாளர் டொனால்ட் லூ, தலிபான்களை ஆக்கப்பூர்வமான பாதையில் ஊக்குவிப்பது காலத்தின் தேவை என்று தெரிவித்தார்.
பெண்கள் மற்றும் சிறுமிகள் மீது தலிபான்கள் அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ள நிலையில் அங்கீகாரம் குறித்து சாத்தியமில்லை என்று சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.