டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக எலான் மஸ்க் அறிவித்து முதல், அவரது சொத்து மதிப்பு 65 பில்லியன் டாலர் அதாவது 5 லட்சத்து 15 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவடைந்துள்ளது.
டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதாக கடந்த ஏப்ரல் 25 ஆம் தேதி எலான் மஸ்க் அறிவித்தபோது, அவரது கார் நிறுவனமான டெஸ்லாவின் ஒரு பங்கு மதிப்பு 998 அமெரிக்க டாலராக இருந்தது.
நேற்று டிவிட்டர் நிறுவனத்தை வாங்குவதை கைவிடுவதாக மஸ்க் அறிவித்த நிலையில், டெஸ்லாவின் பங்கு மதிப்பு 752 டாலராக குறைந்தது. அதாவது 24 சதவிகிதம் வீழ்ச்சியடைந்தது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மஸ்கின் சொத்து மதிப்பு 340 பில்லியன் டாலராக இருந்த நிலையில், கடந்த மாதம் 197 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.