தென் சீன கடலில் சீனாவின் அத்துமீறல் அதிகரித்து வருவதால், ஜப்பான், தென் கொரியா, ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் நாடுகள் தங்களது ராணுவ பட்ஜெட்டை அதிகரித்துள்ளன.
தைவானை சீனா சொந்தம் கொண்டாடி வரும் நிலையில், தைவானுக்கு அருகிலுள்ள தீவுகளில் பாதுகாப்பை பலப்படுத்த ஜப்பானும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தைவானை விட சீனா பலம் மிகுந்தது என்றாலும், அமெரிக்கா தலையிடும் பட்சத்தில் அது மிகப்பெரிய பிரச்சனையாக வெடிக்கக்கூடும் என்று தாய்வான் மக்கள் கருதுகின்றனர்.