உத்தரப் பிரதேசக் காவல்துறை தனக்கு எதிராகப் பதிந்த வழக்கை ரத்து செய்யவும், தன்னை ஜாமீனில் விடுவிக்கவும் கோரி ஆல்ட் நியூஸ் நிறுவனர் முகமது சுபைர் தாக்கல் செய்த மனுவை வெள்ளியன்று விசாரிப்பதாக உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
மத உணர்வைத் தூண்டுவதாகக் கூறி சீதாப்பூர் மாவட்டத்தில் பதிந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சுபைர் தாக்கல் செய்த மனுவை அலகாபாத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்நிலையில் மத உணர்வைப் புண்படுத்தியதாகக் கூறிய வழக்கில் டெல்லி காவல்துறையினர் ஜூன் 27ஆம் நாள் சுபைரைக் கைது செய்தனர்.