சந்திரனைப் பற்றி ஆராய நாசாவால் விண்ணில் செலுத்தப்பட்ட கேப்ஸ்டோன் விண்கலம் தகவல் தொடர்பிலிருந்து துண்டிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஜீன் 28 ஆம் தேதி நியூசிலாந்தில் இருந்து கேப்ஸ்டோன் விண்கலத்தை நாசா விண்ணில் செலுத்தியது. பூமியின் சுற்றுவட்டப்பாதையை கடந்தவுடன் இந்த விண்கலம் ஜுலை 4 ஆம் தேதி சந்திரனை நோக்கி தனது பயணத்தை தொடங்கியது.
ஆனால், சுமார் 11 மணிநேரத்திற்கு பிறகு அந்த விண்கலத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.