ஆட்டோ ரிக்சா, மெர்சிடிஸ் பென்ஸ் காரை முந்தி சென்றுவிட்டதாக, உத்தவ் தாக்கரே குறித்து, மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே விமர்சித்துள்ளார்.
மகா விகாஷ் கூட்டணியை மூன்று சக்கர ஆட்டோ என பாஜக விமர்சித்து வந்த நிலையில், ஆட்டோவை ஓட்டியவர்தான் தற்போது முதலமைச்சராகியுள்ளார் என உத்தவ் தாக்கரே கூறியிருந்தார்.
இதற்கு பதிலடி தந்துள்ள ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ரிக்சா, மெர்சிடிஸ் பென்ஸ் காரை முந்தி சென்றுவிட்டதாகவும், தனது அரசு அனைவருக்குமான அரசு எனவும் தெரிவித்துள்ளார்.
அரசியலுக்கு வருவதற்கு முன்பு, ஏக்நாத் ஷிண்டே ஆட்டோ ஓட்டுநராக இருந்தார்.