மத்தியஅரசுடன் நீடிக்கும் பனிப்போரையடுத்து தடை விதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் டிவிட்டர் நிறுவனம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சில உத்தரவுகள் சட்டத்துக்குப் பொருத்தமானவை அல்ல என்றும் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும் மத்திய அரசின் மீது புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் படி நடந்து கொள்ள மத்திய அரசு டிவிட்டர் நிறுவனத்தை வலியுறுத்தி வருகிறது. சர்ச்சைக்குரிய பதிவுகளைத் தடை செய்யும்படியும் அரசுத் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. கருத்து சுதந்திரத்தை பாதிக்கும் என்று விளக்கம் அளித்து இதனை டிவிட்டர் நிறுவனம் நிராகரித்துவிட்டது