மாநில பல்கலைக்கழகங்களின் வேந்தராக ஆளுநர்கள் செயல்படும் நடைமுறையை மாநில அரசுகள் கடைபிடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்தில் பேசிய அவர், மத்திய பல்கலைக்கழகங்களுக்கு குடியரசுத் தலைவர் வேந்தராகவும், மாநில பல்கலைக்கழகங்களுக்கு ஆளுநர் வேந்தராகவும் செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
இது சரியான மற்றும் நன்கு பரிசோதிக்கப்பட்ட அமைப்பு எனக்கூறிய அவர், வேந்தர் பதவியில் சிலர் அரசியல் பிரச்னைகளை உருவாக்குவதாகவும் மம்தா பானர்ஜியை மறைமுகமாக சாடினார்.