ஈரான் தலைநகர் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் மோசமான புழுதிப் புயல் வீசியது. காற்றின் தரம் மோசமாக இருப்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அரசு நடத்தும் தொலைக்காட்சி எச்சரிக்கை விடுத்தது.
அதன்படி நேற்றைய தினம் பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மூடப்பட்ட நிலையில் வங்கிகள் உள்ளிட்ட சேவைகள் மட்டும் இயங்கின.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து ஈரானை தாக்கிய நான்காவது மோசமான புழுதிப் புயல் இது என்றும் நாட்டின் மேற்கு மற்றும் ஈராக் எல்லை பகுதிகளில் அடிக்கடி இது போன்ற புழுதிப் புயல் ஏற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.