கேரளாவில் சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மீது வேகமாக வந்த ஆட்டோ மோதி ஏற்பட்ட விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில், விபத்து குறித்த சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
பத்தனம்திட்டாவின் எரிமேலி பகுதியிலிருந்து ராணி பகுதி நோக்கி வேகமாக சென்ற ஆட்டோ, கோனி பகுதியருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சொகுசு கார் மீது மோதியது.