சென்னை வேளச்சேரியில் தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த சகோதரர்களை சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் துரத்திச் சென்று போலீசார் கைது செய்தனர்.
கடந்த மாதம் சுமார் 30 செயின் பறிப்பு நிகழ்ந்தது. இதுதொடர்பாக சிசிடிவியை போலீசார் ஆய்வு செய்த போது ஒரே நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. சிசிடிவியில் பதிவான அதே பைக் வேளச்சேரி அருகே செல்வதை கண்ட போலீசார், அவர்களை துரத்தி சென்று மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில் ஹக்கீம், ஜான் பாஷா ஆகிய இருவர் சகோதரர்கள் என்பதும், இவர்கள் மீது 25 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.