ஹைதராபாதில் இரண்டு நாள் பாஜக தேசிய செயற்குழுக்கூட்டம் இன்று தொடங்குகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர்.
குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் இந்தாண்டும், கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களில் அடுத்தாண்டும் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தல்களுக்கான வியூகத்தை வகுக்கும் பணியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், பாஜக தேசிய செயற்குழுவின் இரண்டுநாள் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில், பிரதமர் மோடி, கட்சித் தலைவர் நட்டா, மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநில முதலமைச்சர்கள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட 340 பேர் பங்கேற்பார்கள் என என எதிர்பார்க்கப்படுகிறது.
தென்மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்துவது குறித்தும், மத்திய அரசின் திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.
செகந்திரபாதில் பிரதமர் மோடியின் பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்துடன் பாஜக தேசிய செயற்குழுக் கூட்டம் நாளை நிறைவு பெறும். மிஷன் சவுத் என்ற பெயரில் தென் மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கையில் பாஜக ஈடுபட்டுள்ளது.