பாஜக முன்னாள் செய்தி தொடர்பாளர் நுபுர் சர்மாவுக்கு, உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த நுபுர்சர்மா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டும் காவல்துறையினர் ஏன் கைது செய்யவில்லை என்று நீதிபதிகள் காட்டமாக கேள்வி எழுப்பியதை தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மாதம் 18 ஆம் தேதி நுபுர் சர்மாவிடம் விசாரணை நடத்தி டெல்லி போலீசார் வாக்குமூலம் பெற்றிருந்த நிலையில் மீண்டும் அவருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது.