கேரளாவில் ஆட்டோவை அதிவேகமாக முந்திச்செல்ல முயன்ற தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். அந்த காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளன.
கண்ணூரில் இருந்து பையன்னூர் நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்து குற்றிக்கோல் என்ற பகுதிக்கு சென்றபோது விபத்து நேர்ந்தது. இதில் பேருந்தில் இருந்த ஜோபியா ஜோசப் என்ற செவிலியர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த பேருந்து ஓட்டுநர் மற்றும் 15க்கும் மேற்பட்ட பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேருந்து அதிவேகமாக இயக்கப்பட்டதே விபத்துக்கு காரணம் என போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.