ஆன்லைன் விளையாட்டுகள் மீதான வரியை மாற்றியமைப்பது குறித்து ஜூலை 15 ஆம் தேதிக்குள் அறிக்கை அளிக்குமாறு அமைச்சர்கள் குழுவை ஜிஎஸ்டி கவுன்சில் கேட்டுக் கொண்டுள்ளதாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் சண்டிகரில் இரு நாட்கள் நடைபெற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன், சில மாநிலங்கள் ஜி.எஸ்.டி. இழப்பீடு வழங்கும் காலத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தன என்றார்.