சென்னை அடுத்த முடிச்சூரில் இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதலில், நண்பனை வெட்டியதாக கூறி எதிர்தரப்பு நபரின் வீட்டை அடித்து நொறுக்கிய நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா போதையில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கார் டிரவர் ஹரிபிரசாத்தை, சிலர் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
ஹரிபிரசாத்தை வெட்டியது தொடர்பாக அவரது நண்பர்கள் 5 பேர், அருண் என்பவரின் வீட்டை அடித்து நொறுக்கினர்.
இதுதொடர்பாக கிடைத்த புகாரில் ஹரி பிரசாத்தின் நண்பர்கள் நான்கு பேரை கைது செய்த போலீசார், தலைமறைவான மற்றொரு நண்பரை போலீசார் தேடி வருகின்றனர்.