சென்னை மாதவரத்தில், அடைப்பை சரி செய்வதற்காக கழிவுநீர் பாதாள கால்வாய்க்குள் இறங்கிய கூலித்தொழிலாளி விஷவாயு தாக்கி உயிரிழந்தார்.
25 அடி ஆழ கழிவுநீர் கால்வாயில் ஏற்பட்ட அடைப்பை சீரமைக்க நெல்சன், ரவி என 2 கூலித்தொழிலாளிகளை மெட்ரோ வாரிய ஒப்பந்ததாரர் அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.
எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி பாதாள கால்வாய்க்குள் இறங்கிய நெல்சன் விஷவாயு தாக்கி மயங்கி விழுந்ததால், தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்க உள்ளே இறங்கிய ரவியும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்த தீயணைப்பு வீரர்கள் இருவரையும் உயிருடன் மீட்டனர். ஸ்டான்லி மருத்துவமனை செல்லும் வழியில் நெல்சன் உயிரிழந்த நிலையில், ரவி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.